/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து சிறுவன் ' சீரியஸ் '
/
மின்சாரம் பாய்ந்து சிறுவன் ' சீரியஸ் '
ADDED : ஜூலை 04, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கம் அருகே, நேற்று முன்தினம் இரவு, நடைபாதையில் வசிக்கும் சகோதரர்களான நீலமேக கண்ணன், 14, ஆறுமுகம், 5, ஆகியோர், சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது, சாலை மைய தடுப்பில் அமைக்கப்பட்டிருக்கும் தெரு விளக்கு கம்பத்தை பிடித்துக் கொண்டு, தாண்டும்போது மின்சாரம் பாய்ந்து, இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.
உடனே அப்பகுதியில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், 5 வயது சிறுவன் ஆறுமுகம், புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
நீலமேக கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.