/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தந்தை பெற்ற ரூ.15,000 கடனுக்காக வேலைக்கு அனுப்பப்பட்ட சிறுவன் பலி பாலாற்றங்கரையில் சடலம் மீட்பு
/
தந்தை பெற்ற ரூ.15,000 கடனுக்காக வேலைக்கு அனுப்பப்பட்ட சிறுவன் பலி பாலாற்றங்கரையில் சடலம் மீட்பு
தந்தை பெற்ற ரூ.15,000 கடனுக்காக வேலைக்கு அனுப்பப்பட்ட சிறுவன் பலி பாலாற்றங்கரையில் சடலம் மீட்பு
தந்தை பெற்ற ரூ.15,000 கடனுக்காக வேலைக்கு அனுப்பப்பட்ட சிறுவன் பலி பாலாற்றங்கரையில் சடலம் மீட்பு
ADDED : மே 22, 2025 12:17 AM
காஞ்சிபுரம் ஆந்திர மாநிலம், கூடூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் ஏனாதி, 35. இவரது மனைவி அங்கம்மாள், மகன் வெங்கடேஷ், 9.
பிரகாஷ் ஏனாதி, அதே பகுதியில் வசிக்கும் வாத்து மேய்க்கும் தம்பதியான முத்து, 65, தனபாக்கியம், 60, ஆகியோரிடம் 15,000 ரூபாய் கடனாக பெற்றிருந்தார்.
அந்த கடன் தொகைக்கு பதிலாக, முத்து - தனபாக்கியம் தம்பதியிடம் மகன் வெங்கடேஷை 10 மாதங்கள் வேலைககு அனுப்பியிருந்தார்.
முத்து - தனபாக்கியம் தம்பதி, நாடோடியாக பல ஊர்களுக்கு சென்று வாத்து மேய்ப்பது வழக்கம். அதன்படி, ஒரு மாதம் முன்பாக, தமிழகம், காஞ்சிபுரம் அருகே வேண்பாக்கம் கிராமத்தில் தங்கி வாத்து மேய்க்கும்போது, சிறுவன் வெங்கடேஷ் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளான்.
இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக மகனை குறித்து பிரகாஷ் ஏனாதி விசாரிக்கும்போது, முத்து சரிவர பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மகனை குறித்த தகவல் இல்லாததால், பிரகாஷ் ஏனாதி மற்றும் அங்கம்மாள் காஞ்சிபுரம் வந்து, வாத்து மேய்க்கும் தம்பதியிடம் சிறுவனை குறித்து கேட்டுள்ளனர். அப்போதும், முன்னுக்குபின் முரணாக பதில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிரகாஷ் ஏனாதி, சத்தியவேடு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். இரு காவல் நிலைய போலீசாரின் விசாரணையில், சிறுவன் இறந்ததும், காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் 30 நாட்களுக்கு முன், உடலை முத்து - தனபாக்கியம் தம்பதி புதைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, புத்துார் டி.எஸ்.பி., ரவிகுமார், காஞ்சி தாலுகா ஆய்வாளர் சக்திவேல், வருவாய் துறையினர் முன்னிலையில், நேற்று போலீசார் சிறுவனின் உடலை தோண்டி எடுத்தனர்.
பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைத்து, முத்து, தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர், 45, ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.