ADDED : ஜூன் 17, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், தமிழ்நாடு மலையேறுவோர் சங்கம் சார்பில், தாம்பரத்தை அடுத்த மலைப்பட்டு மலையில், மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சி பெற்ற, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆத்விக், 7, என்ற சிறுவன், நேற்று முன்தினம் மலைப்பட்டு மலையில், 155 அடி பாறை சிகரத்தில் இருந்து, கண்ணை கட்டியபடி கீழே இறங்கி சாதனை படைத்தார்.
'நோபல் புக் ஆப் ரெக்கார்டு' அமைப்பின் நடுவர் ரமணா முன்னிலையில், ஆத்விக் இச்சாதனையை செய்துள்ளார். இதையடுத்து, ஆத்விக் பெயர் நோபல் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்த சிறுவனுக்கு, தமிழ்நாடு மலையேறுவோர் சங்கச் செயலர் திருலோச்சந்தர் பயிற்சி அளித்தார்.