/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மிஸ்டர் தமிழ்நாடு பாடி பில்டிங் போட்டி கட்டுடலை காட்டி அசத்திய சிறுவர்கள்

ADDED : ஜூலை 07, 2025 04:03 AM

சென்னை:தமிழ்நாடு பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கட்டுடலை காட்டி, கவனத்தை ஈர்த்தனர்.
எஸ்.ஏ.எஸ்., பிட்னஸ் ஸ்டூடியோ மற்றும் எம்.எச்.பி.எப்., கூட்டமைப்பு சார்பில், 'ஜெ.கே., கிளாசிக் மிஸ்டர் தமிழ்நாடு' என்ற தலைப்பில், தமிழ்நாடு பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டி, அயனாவரத்தில் நேற்று நடந்தது.
ஜூனியர், சீனியர், மாஸ்டர் பாடி பில்டிங்,ஜூனியர் மென் பிசிக், கிளாசிக் மென் பிசிக், ஸ்போர்ஸ் மாடல் உள்ளிட்ட 19 வகையானபோட்டிகள், தனித்தனியாக நடந்தன.
அதேபோல், மாற்றுத்திறனாளி பிரிவு, சிறுவர்களுக்கு சிறப்பு போட்டிகளும் நடந்தன.
சென்னை, திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாநில முழுதும் இருந்து, 160க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் எடை சரிபார்ப்பு நடந்தது. நேற்று மதியம் 3:00 மணிக்கு போட்டிகள் துவங்கின.
முதலில் துவங்கிய சிறுவர்களுக்கான போட்டியில், 10 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடைய சிறுமியர் உட்பட 20 சிறுவர்கள் ஆர்வமுடன் மேடையில் ஏறினர்.
சிறுவர்கள், உடலில் சாயம் பூசி, நடுவர்களின்கட்டளைக்கு ஏற்ப கட்டுடல்களை காட்டி, பார்வையாளர்களை ஈர்த்தனர். தொடர்ந்து, பல்வேறு வகை போட்டிகள் நடத்தப்பட்டன.