sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரவுடியை வெட்டிய சிறுவர்கள் கைது

/

 ரவுடியை வெட்டிய சிறுவர்கள் கைது

 ரவுடியை வெட்டிய சிறுவர்கள் கைது

 ரவுடியை வெட்டிய சிறுவர்கள் கைது


ADDED : மார் 01, 2026 05:36 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமரன் நகர்: சைதாப்பேட்டை, ஆலந்துார் சாலை, நெருப்புமேடு பகுதியைச் சேர்ந்தவர் முனீஷ், 21; சைதாப்பேட்டை காவல் நிலையம் பதிவேடில், 'சி' பிரிவு ரவுடியாக குறிக்கப்பட்டுள்ளவர்.

இவர், கடந்த 26ம் தேதி, அபித் காலனியில் வசிக்கும் தன் மனைவியை பார்த்துவிட்டு, மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கும்பல், அவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை, அங்கிருந்தோர் மீட்டு கே.கே., நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட 16 வயதுடைய மூன்று சிறுவர்களை, குமரன் நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சைதாப்பேட்டையில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், அதன் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருப்பதும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us