/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேனுபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் நாளை துவக்கம்
/
தேனுபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் நாளை துவக்கம்
தேனுபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் நாளை துவக்கம்
தேனுபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் நாளை துவக்கம்
ADDED : மே 30, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாடம்பாக்கம், :சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், 11 நாட்கள் நடக்கும் பிரம்மோத்சவ பெருவிழா, கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது.
முதல் நாளில், காலை 8:00 மணிக்கு தொட்டி உத்சவம், பஞ்சமூர்த்திகள் உலா, இரவு 8:00 மணிக்கு சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடக்கிறது.
நிகழ்ச்சியில், ஏழாம் நாளான ஜூன் 6ம் தேதி, காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.