ADDED : ஜன 29, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், பெரம்பூர், முத்துக்குமாரசாமி தெருவை சேர்ந்தவர் ராஜா, 33. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர், பெரம்பூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 25ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான மதுராந்தகம் சென்றார்.
நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த 10,000 ரூபாய், வெள்ளி செயின் ஒன்றும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து, செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

