/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் புதிய 5 நட்சத்திர ஹோட்டல் 7 ஏக்கரில் பிரிகேட் குழுமம் கட்டுகிறது

ADDED : ஆக 26, 2025 12:35 AM
சென்னை,
சென்னையில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில், 7 ஏக்கர் பரப்பளவில், 5 நட்சத்திர ஹோட்டல் மற்றும் உயர்தர அலுவலக வளாகத்தை, பிரிகேட் குழுமம் கட்டுகிறது.
சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளது. இப்பகுதியில் 7 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தில், பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரிகேட் குழுமம் கையெழுத்திட்டுள்ளது.
'பிரிகேட் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிரத்யும்னா கிருஷ்ண குமார் இதுபற்றி கூறியதாவது:
இந்த இடத்தில், 225 அறைகள் கொண்ட, ஐந்து நட்சத்திர ஹோட்டலையும், 10 லட்சம் சதுரடிகள் கொண்ட உயர்தர அலுவலக வளாகத்தையும் கட்ட, பிரிகேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வளர்ந்து வரும் சென்னை நகரத்தில், எங்கள் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் வகையில் இந்த கட்டடம் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்
பிரிகேட் குழுமம் ஏற்கெனவே, கடந்த ஜூனில், தென் சென்னை பகுதியில், 2,100 கோடி ரூபாயில் குடியிருப்புகளை கட்டும் திட்டத்தை அறிவித்திருந்தது. சோழிங்கநல்லுார்- மேடவாக்கம் பகுதியில் 14.7 ஏக்கர் நிலப்பரபில் இந்த குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
இதேபோல், கடந்த மே மாதம் வேளச்சேரி பகுதியில், 5.41 ஏக்கர் நிலத்தையும் குடியிருப்புகள் கட்டுவதற்காக இந்நிறுவனம் வாங்கியுள்ளது.
***