/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரிட்டன், துபாயில் ரவுடிகள் பதுங்கல் நாடு கடத்துவது குறித்த பணி தீவிரம்
/
பிரிட்டன், துபாயில் ரவுடிகள் பதுங்கல் நாடு கடத்துவது குறித்த பணி தீவிரம்
பிரிட்டன், துபாயில் ரவுடிகள் பதுங்கல் நாடு கடத்துவது குறித்த பணி தீவிரம்
பிரிட்டன், துபாயில் ரவுடிகள் பதுங்கல் நாடு கடத்துவது குறித்த பணி தீவிரம்
ADDED : செப் 29, 2025 02:34 AM

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் பிரிட்டன் மற்றும் துபாயில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இருவரையும் நாடு கடத்துவது குறித்த பணிகளில் போலீசார், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பூரில், 2024 ஜூலை 5ம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 52, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை, செம்பியம் காவல் நிலைய போலீசார் மற்றும் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து, வேலுார் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன் உள்ளிட்டோரை கைது செய்தனர். ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான, வட சென்னையைச் சேர்ந்த சம்பவம் செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர், வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர்.
இவர்கள் மீது நாடு முழுதும் உள்ள, விமான நிலையங்களுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர். அதன் பின்னர், சி.பி.ஐ., அதிகாரிகள் வாயிலாக, ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால், ரவுடிகளை இன்டர்போல் எனும் சர்வதேச போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், சம்பவம் செந்தில் பிரிட்டனிலும், மொட்டை கிருஷ்ணன் துபாயிலும் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவர்களை கைது செய்து நாடு கடத்துவற்கான பணிகள் நடந்து வருவதாக, சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

