/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ டிரைவரை கழுத்தறுத்து கொன்ற மைத்துனர் கைது
/
ஆட்டோ டிரைவரை கழுத்தறுத்து கொன்ற மைத்துனர் கைது
ADDED : ஜன 22, 2025 12:31 AM

ஆர்.கே. நகர், தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் அஜய், 29; ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி பிரியா, 27, என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
பிரியாவின் சகோதரர் அன்புச்செல்வன், 31, என்பவருக்கும், அஜய்க்கும் இடையே, குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், வீட்டில் அஜய் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, அன்புச்செல்வன் வந்துள்ளார். திடீரென அஜயை தாக்கி கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில், அஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின் அங்கிருந்து தப்பிய அன்புச்செல்வன், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில், உதவி ஆய்வாளர் பிரவீனிடம் சரணடைந்தார். ஆர்.கே.நகர் போலீசார், அன்புச்செல்வனை கைது செய்து விசாரிக்கின்றனர்.