/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது போதை தகராறில் தம்பியை குத்தி கொன்ற அண்ணன் சரண்
/
மது போதை தகராறில் தம்பியை குத்தி கொன்ற அண்ணன் சரண்
மது போதை தகராறில் தம்பியை குத்தி கொன்ற அண்ணன் சரண்
மது போதை தகராறில் தம்பியை குத்தி கொன்ற அண்ணன் சரண்
ADDED : நவ 03, 2025 01:30 AM
சென்னை: தி.நகரில், மது போதையில் ஏற்பட்ட தகராறில், தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன் போலீசில் சரணடைந்தார்.
தி.நகர், மாம்பலம் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மூத்த மகன் தினகரன், 27, என்பவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். இளைய மகன் சரண், 24, வெல்டிங் வேலை செய்து வருகிறார்.
இருவரும் நேற்று அதிகாலை வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தம்பி சரண், வீட்டிற்குள் சென்று காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துவந்து அண்ணன் தினகரனை குத்த முயன்றார். அப்போது கத்தியை பறித்த அண்ணன், தம்பியின் நெஞ்சில் குத்தி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சரணை, உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சரண் இறந்துவிட்டதாக கூறினர்.
இதையடுத்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் தினகரன் சரணடைந்தார். போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

