/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.ஐ.டி., வாலிபால் பைனலில் லயோலா - ஹிந்துஸ்தான்
/
ஐ.ஐ.டி., வாலிபால் பைனலில் லயோலா - ஹிந்துஸ்தான்
ADDED : நவ 03, 2025 01:30 AM
சென்னை: ஐ.ஐ.டி.யில் நடந்து வரும் வாலிபால் போட்டியில், அனைத்து லீக் போட்டிகள் முடிவில், ஆண்களில் லயோலா மற்றும் ஹிந்துஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
கிண்டியில் உள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி., சார்பில், 2025ம் ஆண்டிற்கான விளையாட்டு திருவிழா நடந்து வருகிறது. இதில், கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட 12 வகையான போட்டிகள் நடக்கின்றன.
நேற்று நடந்த ஆண்கள் வாலிபால் இறுதி லீக் சுற்றுகளில், 25 - 12, 25 - 15, 25 - 12 என்ற கணக்கில், ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணியை வீழ்த்தி, லயோலா அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், ஹிந்துஸ்தான் அணி, 25 - 16, 25 - 21, 25 - 19 என்ற கணக்கில், ஒய்.எம்.சி.ஏ., அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. லயோலா, ஹிந்துஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
அதேபோல், நேற்று நடந்த கூடைப்பந்து லீக் ஆட்டத்தில், எத்திராஜ் அணி, 27 - 11 என்ற கணக்கில் ஐ.ஐ.டி., மெட்ராஸ் 'பி' அணியையும், ஐ.ஐ.டி., மெட்ராஸ் 'ஏ' அணி, 38 - 23 என்ற கணக்கில் சென்னை வி.ஐ.டி., கல்லுாரி அணியையும் வீழ்த்தின.
ஹாக்கி போட்டியில், அனைத்து சுற்றுகள் முடிவில், இறுதிப் போட்டிக்கு குருநானக் மற்றும் ஒய்.எம்.சி.ஏ., அணிகள் தேர்வாகி உள்ளன. இன்றுடன் போட்டிகள் நிறைவடைகின்றன.

