/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேர்மன் கோப்பை வாலிபால் சேலம் பாரதியார் அணி முதலிடம்
/
சேர்மன் கோப்பை வாலிபால் சேலம் பாரதியார் அணி முதலிடம்
சேர்மன் கோப்பை வாலிபால் சேலம் பாரதியார் அணி முதலிடம்
சேர்மன் கோப்பை வாலிபால் சேலம் பாரதியார் அணி முதலிடம்
ADDED : நவ 03, 2025 01:31 AM

சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான மகளிர் வாலிபால் போட்டியில், சேலம், ஆத்துார் பாரதியார் மெட்ரிக் பள்ளி முதலிடத்தை கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி இணைந்து, சேர்மன் கோப்பைக்கான வாலிபால், கூடைப்பந்து போட்டிகள், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலையில் நடந்து வருகிறது. போட்டிகள் 'லீக்' முறையில் நடக்கின்றன. தலா எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
மாணவியருக்கான வாலிபால் போட்டியில், சென்னை டி.இ.எல்.சி., மாக்டலீன் பள்ளி, அரையிறுதியில் செயின்ட் ஆன்ஸ் பள்ளியை, 25 - 14, 25 - 11 என்ற கணக்கில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில், சேலம் ஆத்துார் பாரதியார் பள்ளி, செயின்ட் மேரிஸ் பள்ளியை, 25 - 10, 25 - 18 என்ற கணக்கில் வென்றது.
இறுதிப் போட்டியில், ஆத்துார் பாரதியார் பள்ளி மற்றும் டி.இ.எல்.சி., மாக்டலீன் பள்ளி அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்ட முடிவில், திறமையையும், ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தி, 25 - 22, 25 - 16 என்ற கணக்கில், ஆத்துார் பாரதியார் பள்ளி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

