/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் கர்நாடகாவின் அபூர்வ் அசத்தல்
/
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் கர்நாடகாவின் அபூர்வ் அசத்தல்
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் கர்நாடகாவின் அபூர்வ் அசத்தல்
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் கர்நாடகாவின் அபூர்வ் அசத்தல்
ADDED : நவ 03, 2025 01:31 AM

சென்னை: ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டியின் நேற்றைய ஏழாவது சுற்றில், கர்நாடக வீரர் அபூர்வ் காம்பிள், ௫.5 புள்ளிகள் பெற்று, தனிப்பட்ட முன்னிலை பெற்றார்.
தமிழ்நாடு சதுரங்க சங்கம் நடத்தும், 34வது ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டி, போரூரில் நடந்து வருகிறது. நேற்றைய ஏழாவது சுற்றில், கர்நாடகாவின் அபூர்வ் காம்பிள், கொலம்பியா வீரர் பலென்சியா மோரலஸை வீழ்த்தினார்.
போட்டி ஆரம்பம் முதலே தாக்குதல் முறையில் விளையாடிய அபூர்வ், 10வது நகர்வுக்குள், பலென்சியாவின் பலவீனமான நகர்வுகளை வெளிப்படுத்தி, அவர் ராணியை இழக்க நேரிட்டது. வேறு வழியின்றி போட்டியை கைவிட்டார்.
சென்னையை சேர்ந்த கே.பி. பிரணவ், அர்ஜென்டினா வீரர் ரவுல் க்லாவேரியுடன் 'டிரா' செய்தார். அதேசமயம், தமிழக வீரர் தினேஷ் ராஜன், சக வீரர் பி.விக்னேஷை, 35 நகர்வுகளில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில், சென்னையை சேர்ந்த வி.ராகவ், கியூபாவின் ஜார்ஜ் மார்கோசிடம் தோல்வியடைந்தார்; மற்றொரு கியூபா வீரர் டயாஸ்மனி, பெரு வீரர் ஓப்லிடாஸை வென்றார்.
ஏழாவது சுற்றுகள் முடிவில், கர்நாடகாவின் அபூர்வ் காம்பிள், ௫.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார்.
அவரை தொடர்ந்து, கே.பி. பிரணவ் 5 புள்ளிகளும், கியூபா டயாஸ்மனி ஓடேரோ 4.5 புள்ளிகளும், தினேஷ் ராஜன் 4.5 புள்ளிகளும், பெருவின் ஓப்லிடாஸ் கார்லோமாக்னோ, 3.5 புள்ளிகளிலும் உள்ளனர்.
அடுத்த சுற்றுகளில், அபூர்வின் தொடர்ச்சியான ஆட்டம் சாம்பியன் பட்டம் நோக்கி இட்டுச்செல்லுமா என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

