/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அபராதம் விதித்த போலீஸ்காரரை தாக்க முயன்ற சகோதரர்கள் கைது
/
அபராதம் விதித்த போலீஸ்காரரை தாக்க முயன்ற சகோதரர்கள் கைது
அபராதம் விதித்த போலீஸ்காரரை தாக்க முயன்ற சகோதரர்கள் கைது
அபராதம் விதித்த போலீஸ்காரரை தாக்க முயன்ற சகோதரர்கள் கைது
ADDED : ஆக 20, 2025 03:14 AM
வளசரவாக்கம், மது போதையில் வாகனம் ஓட்டிய நபருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து தலைமை காவலரை தாக்க முயன்ற, சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
வளசரவாக்கம் போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் ராஜேஷ், 35. நேற்று முன்தினம் இரவு வானகரத்தை அடுத்த போரூர் கார்டன் அருகே, போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., கண்ணனுடன், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அவ்வழியாக, சரக்கு வாகனம் ஓட்டி வந்த நபரை சோதனை செய்தபோது, அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய தமிழ்செல்வன் என்பருக்கு அபராதம் விதித்தனர்.
உடனே, தமிழ்செல்வன், தன் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த இருவர், தலைமை காவலர் ராஜேஷிடம் தகராறு செய்தனர். அதை வீடியோ எடுத்தபோது, தாக்க முயன்றனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற வளசரவாக்கம் போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், ஆலப்பாக்கம் பாலமுருகன் தெருவை சேர்ந்த சகோதரர்களான பலராமன், 35, விஷ்ணு, 32 என, தெரியவந்தது.
அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.