/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தங்க நகை மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் ஜெய்ப்பூரில் கைது
/
தங்க நகை மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் ஜெய்ப்பூரில் கைது
தங்க நகை மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் ஜெய்ப்பூரில் கைது
தங்க நகை மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் ஜெய்ப்பூரில் கைது
ADDED : ஆக 05, 2025 12:19 AM

சென்னை,சவுகார்பேட்டை, என்.எஸ்.சி., போஸ் சாலையில், தங்க நகைக்கடை நடத்தி வருபவர் தில்குஷ் ஜெயின், 50. இவரிடம், பத்திரி வீரசாமி சந்தில் நகைக்கடை நடத்தி வந்த, சகோதரர்களான முகேஷ் ராங்கா, மனிஷ் ராங்கா மற்றும் சுனில் ராங்கா ஆகியோர், பிப்., 3ம் தேதி, 75 சவரன் தங்க நகைகளை வாங்கினர். தொழில் நிமித்தமாக நகைகளை வாங்கிய அவர்கள், அடுத்த நாளே தலைமறைவாகினர்.
இது குறித்த தில்குஷ் ஜெயின் புகாரின்படி வழக்கு பதிந்த யானைகவுனி போலீசார், நவீன தொழில் நுட்ப வசதி உதவியுடன், மொபைல் போன்களின் எண்களை கொண்டு, மூவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
அங்கு சென்ற தனிப்படையினர், ஜெய்ப்பூர் போலீசார் உதவியடன் முகேஷ் ராங்கா, அவரது சகோதரர் மணிஷ் ராங்கா, ஆகிய இருவரையும், இரு தினங்களுக்கு முன் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 15 சவரன் தங்க நகைகள், 87 கிராம் வெள்ளி, இரண்டு லட்சம் ரூபாய், இரண்டு மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இருவரையும் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடுகின்றனர்.