/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் 'தர்ணா'
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் 'தர்ணா'
ADDED : அக் 29, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்ப்பாக்கம், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கத்தினர், நேற்று கீழ்ப்பாக்கத்தில் ஒருநாள் 'தர்ணா' போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்ப்பாக்கம், மில்லர்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம் செயல்படுகிறது.
இங்குள்ள நுழைவாயிலில் நேற்று, பி.எஸ்.என்.எல்., - தொலைத்தொடர்பு ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு மற்றும் அதன் சம்மேளனங்கள் சார்பில், ஒருநாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆறு ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவை தொகை, ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு, 41 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.