/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பி.எஸ்.என்.எல்., துாண்கள் மாயம் நடவடிக்கை எடுக்க உ த் த ர வ ு
/
பி.எஸ்.என்.எல்., துாண்கள் மாயம் நடவடிக்கை எடுக்க உ த் த ர வ ு
பி.எஸ்.என்.எல்., துாண்கள் மாயம் நடவடிக்கை எடுக்க உ த் த ர வ ு
பி.எஸ்.என்.எல்., துாண்கள் மாயம் நடவடிக்கை எடுக்க உ த் த ர வ ு
ADDED : அக் 04, 2025 02:02 AM
சென்னை, நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சென்னையில் காணாமல் போன பி.எஸ்.என்.எல்., துாண்கள் குறித்து நடவடிக்கை எடுக்க, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 25க்கும் மேற்பட்ட காப்பர் கேபிள் உள்ள துாண்கள், சென்னையில் அடுத்தடுத்து காணமால் போகின்றன.
இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த 1ம் தேதி, படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, காணாமல் போன துாண்கள், காப்பர் கேபிள்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து, அறிக்கை அளிக்கும்படி, பகுதிகளில் உள்ள பொது மேலாளர்களுக்கு, பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரி மாற்றம் பி.எஸ்.என்.எல்., சென்னை வட்ட விஜிலென்ஸ் அதிகாரியாக ஸ்ரீராம் பணியாற்றி வந்தார்.
காணாமல் போகும் துாண்கள் குறித்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்க, அவர் வலியுறுத்தி வந்த நிலையில், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜிலென்ஸ் அதிகாரியாக தன்ராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.