/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேனாம்பேட்டை - சைதை மேம்பாலம் 4 மாநிலத்தில் தயாராகுது இரும்பு துாண்
/
தேனாம்பேட்டை - சைதை மேம்பாலம் 4 மாநிலத்தில் தயாராகுது இரும்பு துாண்
தேனாம்பேட்டை - சைதை மேம்பாலம் 4 மாநிலத்தில் தயாராகுது இரும்பு துாண்
தேனாம்பேட்டை - சைதை மேம்பாலம் 4 மாநிலத்தில் தயாராகுது இரும்பு துாண்
ADDED : அக் 04, 2025 01:57 AM
சென்னை, சென்னை தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை அருகே அமைக்கப்படும் மேம்பாலத்திற்கு, நான்கு மாநிலங்களில் இரும்பு துாண் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம், 3.20 கி.மீ., நீளத்திற்கு, 621 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.
பாலத்தில் பயன்படுத்தப்பட உள்ள, 16,300 டன் எடை உடைய இரும்பு துாண் உள்ளிட்ட கட்டமைப்புகள், திருவள்ளூர் 'பின்னார்' ஆலையிலும், குஜராத், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள ஆலைகளிலும் தயாரிக்கப்படுகின்றன.
அதில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகில் உள்ள 'பின்னார்' இரும்பு தொழிற்சாலையில், 1,436 டன் எடை உடைய இரும்பு துாண்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த ஆலைக்கு, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று சென்று, பாலத்திற்காக தயாரிக்கப்படும் இரும்பு துாண்களின் தரத்தை ஆய்வு செய்தார். அவருடன் நெடுஞ்சாலைத் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.
இதுகுறித்து, அமைச்சர் வேலு கூறுகையில், ''உயர்மட்ட மேம்பால பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க, தினசரி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
''தயாராகும் இரும்பு துாண்கள், சென்னை எடுத்து வரப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என்றார்.