/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் சென்ற பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
/
சாலையில் சென்ற பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
சாலையில் சென்ற பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
சாலையில் சென்ற பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்
ADDED : அக் 04, 2025 01:57 AM
சென்னை, ஆர்.ஏ.புரத்தில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை, அப்பகுதியில் உள்ள வீட்டின் வளர்ப்பு நாய் கடித்து குதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்.ஏ.புரம், குட்டி கிராமணி தெரு, காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் உஷா, 45. அவர் சுற்று வட்டாரப் பகுதியில், வீட்டு வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வேலைக்கு புறப்பட்டபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் குமார் என்பவரின் 'பாக்சர்' ரக வளர்ப்பு நாய், அவரது சேலையை கடித்து இழுத்துள்ளது. இதில், உஷா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பெண்ணின் காதை கடித்துள்ளது.
பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர், அவரை மீட்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரது காதில் தையல் போடப்பட்டது. நாயின் உரிமையாளர் மீது அளிக்கப்பட்ட புகாரையடுத்து, அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.