/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பக்' கோப்பை வில்வித்தை எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்' - படம் வேண்டாம்
/
'பக்' கோப்பை வில்வித்தை எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்' - படம் வேண்டாம்
'பக்' கோப்பை வில்வித்தை எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்' - படம் வேண்டாம்
'பக்' கோப்பை வில்வித்தை எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்' - படம் வேண்டாம்
ADDED : ஆக 01, 2025 12:35 AM

சென்னை,சென்னை ஒய்.எம்.சி.ஏ.வில் நடந்த 'பக்' நினைவு கோப்பை வில்வித்தையில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி 13 பதக்கங்களை கைப்பற்றி, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி கல்லுாரி சார்பில், பக் நினைவு கோப்பைக்கான போட்டிகள், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் நடந்தன.
இதன் ஆண்களுக்கான காம்பவுன்ட் 50 மீட்டர் வில்வித்தையில், எஸ்.ஆர்.எம்., அணியின் ரிஷ்வா மற்றும் ஸ்ரீராம் முதல் இரண்டு இடங்களை பிடித்துத் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் கைப்பற்றினர்.
பெண்கள், காம்பவுன்ட் 50 மீட்டர் பிரிவில், எஸ்.ஆர்.எம்., அணியின் சாய்லக்ஷனா, ஹர்ஷிதா ஆகியோர் முறையே இரண்டு, மூன்றாம் இடம் படித்து, வெள்ளி மற்றும் வெண்கலத்தை கைப்பற்றினர்.
அதேபோல் ஆண்களுக்கான ரீகர்வ் 70 மீட்டர் போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணியின் நஹுல் தங்கம், சசிதரன் வெள்ளி; பெண்களில் ரீகர்வ் 70 மீட்டர் பிரிவில் ஜீவிதா வெள்ளி, கனகதாரா வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து, ஆண்களுக்கான இந்திய 50 மீட்டர் பிரிவு போட்டியில் அசத்திய எஸ்.ஆர்.எம்., பல்கலையின் அருண் கிரந்தன், மணிகண்டன், ஹரி பிரசாத் ஆகியோர் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.
மகளிர் இந்திய 50 மீட்டர் பிரிவில் ஜீவிதா, ஜிதன்யா முதல் இரண்டு இடங்களை பிடித்துத் தங்கம் மற்றும் வெள்ளியை கைப்பற்றினர்.
போட்டி முடிவில் எஸ்.ஆர்.எம்., அணி வீரர் - வீராங்கனையர் நான்கு தங்கம், ஆறு வெள்ளி, மூன்று வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

