/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதுகாப்பு படை வீரரை தாக்கிய பர்மா பஜார் வியாபாரி கைது
/
பாதுகாப்பு படை வீரரை தாக்கிய பர்மா பஜார் வியாபாரி கைது
பாதுகாப்பு படை வீரரை தாக்கிய பர்மா பஜார் வியாபாரி கைது
பாதுகாப்பு படை வீரரை தாக்கிய பர்மா பஜார் வியாபாரி கைது
ADDED : நவ 01, 2025 02:04 AM

வடக்கு கடற்கரை: பாதுகாப்பு படை வீரரை தாக்கிய, பர்மா பஜார் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக், 24. இவர், கடந்த ஆறு மாதங்களாக, ரயில்வேயில் 'ஏசி' மெக்கானிக் தற்காலிக பணியில் உள்ளார்.
இவர், நேற்று முன்தினம், பேசின்பிரிட்ஜ் ரயில்வே பணிமனையில் பணியில் இருந்தபோது, அவரது மொபைல் போன் காணாமல் போனது.
இது தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு பினோயிடம் புகார் அளித்தார். மொபைல் போனை 'டிராக்கிங்' செய்தபோது, பர்மா பஜார் அருகில் இருப்பதாக, 'டவர் லோகேஷன்' காட்டியது.
இதையடுத்து, ஏட்டு பினோய், கார்த்திக் ஆகியோர், நேற்று முன்தினம் நள்ளிரவு, பர்மா பஜார், ஈவ்னிங் பஜாரில் சந்தேகப்படும்படி நின்றிருந்த சந்துரு என்பவரிடம் விசாரித்தனர்.
அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரது இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அதில், பணமும், நிறைய மொபைல் போன்களும் இருந்தன.
திருடப்பட்ட மொபைல் போனை எடுத்து காட்டும்படி, பினோய் அவரிடம் கூறினார். அப்போது, பர்மா பஜார் மொபைல்போன் விற்பனை கடைகளில் இருந்த, 10க்கும் மேற்பட்டோர், பினோய், கார்த்திக் ஆகியோரை தாக்கினர்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு பினோய், வடக்கு கடற்கரை போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன்படி வழக்கு பதிந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட திருவொற்றியூரை சேர்ந்த பர்மா பஜார் வியாபாரி சந்துரு, 22, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

