/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் பயணியர் நிழற்குடை சீரமைக்கும் பணி தீவிரம்
/
பஸ் பயணியர் நிழற்குடை சீரமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 02, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகராட்சியில் பேருந்து வழித்தடங்களில் உள்ள பயணியர் நிழற்குடைகள் பல சேதமடைந்துள்ளன. அந்தவகையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் 130 நிழற்குடைகள் உள்ளன. இதில், 65 நிழற்குடைகள் தனியார் பராமரிப்பில் உள்ளது.
அவற்றை சீரமைக்கும் பணி நடக்கிறது. முதற்கட்டமாக 30 லட்சம் ரூபாய் செலவில், பேருந்து பயணியர் நிழற்குடையை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன.
அதேபோல், வளசரவாக்கம் மண்டலத்தில் 18 பேருந்து நிழற்குடைகள் உள்ளன. அவற்றை 32 லட்சம் ரூபாய் செலவில் சீர் செய்யும் பணி நடக்கிறது.