/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் நிறுத்தப்படும் பஸ்கள் தாம்பரத்தில் நாள்தோறும் நெரிசல்
/
சாலையில் நிறுத்தப்படும் பஸ்கள் தாம்பரத்தில் நாள்தோறும் நெரிசல்
சாலையில் நிறுத்தப்படும் பஸ்கள் தாம்பரத்தில் நாள்தோறும் நெரிசல்
சாலையில் நிறுத்தப்படும் பஸ்கள் தாம்பரத்தில் நாள்தோறும் நெரிசல்
ADDED : நவ 05, 2025 03:07 AM

தாம்பரம்: ஜி.எஸ்.டி., சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து, பேருந்துகளை வரிசையாக நிறுத்துவதால், தாம்பரத்தில் நாள்தோறும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தாம்பரம் ரயில் நிலையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, பேருந்து நிறுத்தம் உள்ளது. அதை ஒட்டி, பூந்தமல்லி, ஆவடி பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இந்நிலையில், தாம்பரம் - வேளச்சேரி இடையே இயக்கப்படும் தடம் எண்: 51 என்ற பேருந்துகள், நிறுத்தத்திற்குள் செல்லாமல், அகர்வால் கண் மருத்துவமனை அருகே, சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
வரிசையாக பேருந்துகள் நிறுத்தப்படுவதால், 'பீக் ஹ வர்' நேரத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் க டும் நெரிசல் ஏற்படுகிறது. அடாவடியாக நிறுத்தப்படும் பேருந்துகளால், அந்த இடத்தை கடக்க, தினசரி வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. போக்குவரத்தை சீர்செய்ய வேண்டிய போக்குவரத்து போலீசார், இதை பற்றி சிந்திப்பதே இல்லை. இதனால், அரசு பேருந்துகளின் அடாவடி நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.
இதே நிலை நீடித்தால், நெரிசலும் பல மடங்கு அதிகரிக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள் நெரிசல் இன்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

