/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பை - பாஸ் சாலையில் சாகசம் பைக் ரோமியோவுக்கு வலை
/
பை - பாஸ் சாலையில் சாகசம் பைக் ரோமியோவுக்கு வலை
ADDED : ஜன 08, 2026 06:49 AM
சென்னை: மதுரவாயல் -- தாம்பரம் பை - பாஸ் சாலையில் சாகசத்தில் ஈடுபட்டோரை, போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில், நொளம்பூர் அணுகு சாலையில், நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பைக்கின் முன்சக்கரத்தை துாக்கி சாகசத்தில் ஈடுபட்டார். மேலும், அதை வீடியோவாக சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளார்.
முகமூடி அணிந்த அந்த வாலிபர், 'ஹெல்மெட்' அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி, அணுகு சாலையில் முன் சக்கரத்தை துாக்கியபடி, நீண்ட துாரம் சென்றுள்ளார். இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், விபத்து அபாயத்தில் கடும் அவதிக்குள்ளாகினர்.
தகவலறிந்த வானகரம் போலீசார், சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் குறித்து விசாரிக்கின்றனர்.

