/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேபிள் 'டிவி' ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி
/
கேபிள் 'டிவி' ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி
ADDED : ஜன 08, 2025 08:32 PM
திருநின்றவூர்:திருநின்றவூர், கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமார், 50. தனியார் கேபிள் 'டிவி' டெக்னீசியன். இவரது மனைவி மோகனா, 40. தம்பதிக்கு 16 வயதில் மகன் உள்ளார்.
செல்வராஜ் நகரில் பணிக்கு சென்ற குமார், மின் கம்பத்தில் ஏறி, கேபிள் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, பராமரிப்பு முடிந்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது கை தவறுதலாக மின் வடத்தில் உரசி, மின்சாரம் பாய்ந்து, மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த திருநின்றவூர் போலீசார், குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

