ADDED : பிப் 17, 2025 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதவரம்: மாதவரம் ரெட்டேரி - பாடி வரையிலான 200 அடி சாலையில், மெட்ரோ ரயில் வழித்தடப் பணிகள் நடந்து வரும் நிலையில், சாலையோரம் மின் வாரியம் சார்பில் புதை மின் வடம் பதிக்கும் பணிகளும் நடக்கின்றன.
இங்கு மெட்ரோ ரயில் நிலையப் பணியால், பீக் ஹவர்சில் நெரிசலான போக்குவரத்து உள்ள நிலையில், சாலையோரம் மின் வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளத்தில், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் விழும் அபாயம் உள்ளது.
பகுதி மக்கள் கூறுகையில், 'அலுவலக நேரத்தில் சாலையில் நடந்து செல்லக்கூட முடியாது. வாகன நெரிசலால் நடந்து செல்பவர்கள், பைக் ஓட்டிகள், தவறி மின்வாரியம் தோண்டிய பள்ளத்தில் விழுகின்றனர். அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, மின்வாரிய பணியை துரிதப்படுத்த வேண்டும்' என்றனர்.

