/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு
/
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : நவ 04, 2025 12:30 AM
சென்னை: திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மாணவ - மாணவியர் சேர்க்கைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
திருவொற்றியூர், குமரன் நகர் 2வது தெருவில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்பிரிவுகளில், சேர்க்கைக் கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இங்கு பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் கிடையாது. மாதாந்திர உதவித்தொகை, 750 ரூபாய், தகுதியுள்ள மாணவியருக்கு, புதுமைப்பெண் மற்றும் மாணவருக்கு தமிழ் புதல்வன், திட்டத்தின் கீழ் மாதந்தோறும், 1,000 ரூபாய், சீருடை, பஸ் பாஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர் வரும், 14ம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 95668 91187, 99403 72875, 89460 17811, 81108 45311 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

