/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.எம்., நார்ம் செஸ் போட்டி பட்டம் வெல்வாரா அபூர்வ்?
/
ஐ.எம்., நார்ம் செஸ் போட்டி பட்டம் வெல்வாரா அபூர்வ்?
ஐ.எம்., நார்ம் செஸ் போட்டி பட்டம் வெல்வாரா அபூர்வ்?
ஐ.எம்., நார்ம் செஸ் போட்டி பட்டம் வெல்வாரா அபூர்வ்?
ADDED : நவ 04, 2025 12:31 AM

சென்னை: ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டியில், கர்நாடக வீரர் அபூர்வ் காம்பிள், எட்டாவது சுற்று முடிவில், 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதால், சாம்பியன் பட்டம் அவருக்கே செல்லும் என, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சக்தி குழுமம் ஆதரவில், தமிழ்நாடு சதுரங்க சங்கம் நடத்தும், 34வது ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டி, போரூரில் நடக்கிறது.
நேற்று நடந்த எட்டாவது சுற்றில், தமிழகத்தின் தினேஷ் ராஜனுடன் கடுமையாக மோதிய அபூர்வ், 'டிரா' செய்தார். இதன் வாயிலாக, அவர் 6 புள்ளிகளைப் பெற்று முன்னிலையை தக்கவைத்துக் கொண்டார்.
கியூபாவின் டாயாஸ்மணி, சென்னை வீரர் விக்னேஷை வீழ்த்தி, 5.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு உயர்ந்தார். அதேபோல், சென்னை வீரர் பிரணவ், கொலம்பியாவின் பாலென்சியா மோரலஸுடன் டிரா செய்து, 5.5 புள்ளிகளைப் பெற்று, அடுத்த இடத்தில் தொடர்கிறார்.
இன்று நடக்கும் இறுதி சுற்றில், அபூர்வ், டாயாஸ்மணியுடன் மோதவுள்ளார். அபூர்வ் அரை புள்ளி பெற்றாலே, தனது இரண்டாவது ஐ.எம்., நார்மையும், சாம்பியன் கோப்பையையும் கைப்பற்ற முடியும்.
ஆனால், அவர் தோல்வியடைந்தாலோ அல்லது 'டிரா' செய்தாலோ 'டை-பிரேக்கர்' சண்டையை தவிர்க்க முடியாது.
இதனால், இன்றைய இறுதிச்சுற்று பரபரப்பாக இருக்கும் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

