/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவம் சார்ந்த படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
/
மருத்துவம் சார்ந்த படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : நவ 11, 2025 12:39 AM
சென்னை: சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் காலியாக உள்ள, 1,149 இடங்களில் சேர, இம்மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
சென்னை மருத்துவ கல்லுாரியில், 254, ஸ்டான்லியில் 393, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 319, ஓமந்துாராரில் 48 உட்பட, மருத்துவம் சார்ந்த படிப்புகளில், 1,149 இடங்கள் காலியாக உள்ளன.
மேற்கண்ட கல்லுாரியில் ஒராண்டு மருத்துவ படிப்பில் சேர, இம்மாதம் 14ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட கல்லுாரி துணை முதல்வர்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

