/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜல்லிக்கற்கள் கொட்டி வடிகால் துளை அடைப்பு எண்ணுாரில் அவலம்
/
ஜல்லிக்கற்கள் கொட்டி வடிகால் துளை அடைப்பு எண்ணுாரில் அவலம்
ஜல்லிக்கற்கள் கொட்டி வடிகால் துளை அடைப்பு எண்ணுாரில் அவலம்
ஜல்லிக்கற்கள் கொட்டி வடிகால் துளை அடைப்பு எண்ணுாரில் அவலம்
ADDED : நவ 11, 2025 12:40 AM

எண்ணுார்: எண்ணுாரில், வடிகால் துளையில் ஜல்லிக்கற்கள் கொட்டி அடைத்த அவலம் அரங்கேறியுள்ளது.
எண்ணுார், கத்திவாக்கம் மேம்பாலத்தின் கீழ், அனல் மின் நிலைய குடியிருப்பில் இருந்து, எர்ணாவூர் நோக்கி செல்லக் கூடிய, 500 மீட்டர் துார அணுகு சாலையில், மழைநீர் சேகரமாகும் வடிகாலின் இரும்பு சல்லடைகள் மாயமானது.
அதன்படி, சல்லடைகள் இல்லாத இடங்களில், 1 அடிக்கு பள்ளம் இருப்பதால், அவ்வழியே மாநகர பேருந்து, வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பாதசாரிகள், பள்ளம் தெரியாமல் விழுந்து காயமுறுவது தொடர்கதையாக இருந்தது.
இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால், சல்லடைகள் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளாமல், அந்த பள்ளத்தில் ஜல்லிக்கற்களை கொட்டி அடைத்து வைத்துள்ளதால், மழைநீர் வடிகாலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அலட்சியமாக வடிகால் துளையில் கொட்டி அடைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்களை அகற்றி விட்டு, மழைநீர் வடிய ஏதுவாக, இரும்பு அல்லது கான்கிரீட் சல்லடைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

