/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டட கழிவு மேலாண்மை வரைவு கருத்து கூற மாநகராட்சி அழைப்பு
/
கட்டட கழிவு மேலாண்மை வரைவு கருத்து கூற மாநகராட்சி அழைப்பு
கட்டட கழிவு மேலாண்மை வரைவு கருத்து கூற மாநகராட்சி அழைப்பு
கட்டட கழிவு மேலாண்மை வரைவு கருத்து கூற மாநகராட்சி அழைப்பு
ADDED : பிப் 17, 2025 01:13 AM
சென்னை: சென்னையில் கட்டட கழிவு மேலாண்மைக்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்ட நிலையில், இது குறித்து, 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை, கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவு மேலாண்மைக்கான வரைவு வழிக்காட்டுதல்களை, https://chennaicorporation.gov.in/gcc என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், கட்டட கழிவுகள் உருவாக்குபவர்கள், மிகச்சிறிய அளவில் கழிவு, சிறிய அளவு கழிவு, பெருமளவு கழிவு, சேவை வழங்குபவர்கள் உருவாக்கும் கழிவு என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர்.
உருவாகும் கட்டட கழிவு, ஏழு நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்படாத கழிவு மாநகராட்சியால் அகற்றப்படும்.
அகற்றுதலுக்கான செலவு, வார்டு பொறியாளர்களால், அபராதத்துடன் வசூலிக்கப்படும். நீர்நிலைகள், சாலைகள், பொது இடங்களில் கட்டட கழிவு கொட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் வழிகாட்டுதலில் இடம் பெற்றுள்ளன.
இந்த வழிகாட்டுதல் குறித்து, சேவை வழங்குனர்கள், பில்டர்கள், கட்டட உரிமையாளர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை, 30 நாட்களில் தெரிவிக்க, மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. கருத்து தெரிவிக்க விரும்புவோர், 'swmdebriswaste@gmail.com' என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.