ADDED : ஆக 30, 2026 04:06 AM
அ நிறம் | அளவு
சென்னை: 'அனைத்து மாநகர பேருந்துகளிலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்' என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 1,000 மின்சார 'ஏசி' பஸ்களும், படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
நெரிசலை பயன்படுத்தி, பயணியரின் பொருட்கள் திருடு போவதை தடுக்கவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, 50 சதவீத பேருந்துகளில் கேமராக்கள் உள்ளன. மீதமுள்ள 50 சதவீத பேருந்துகளிலும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் கேமரா பொருத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
