/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தடுப்பு இல்லாமல் கால்வாய் பணி சோமங்கலத்தில் விபத்து அபாயம்
/
தடுப்பு இல்லாமல் கால்வாய் பணி சோமங்கலத்தில் விபத்து அபாயம்
தடுப்பு இல்லாமல் கால்வாய் பணி சோமங்கலத்தில் விபத்து அபாயம்
தடுப்பு இல்லாமல் கால்வாய் பணி சோமங்கலத்தில் விபத்து அபாயம்
ADDED : நவ 23, 2024 12:33 AM

தாம்பரம்,
சென்னை புறவழிச்சாலை மற்றும் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில், தாம்பரம் -- சோமங்கலம் நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழியே தினமும், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
கன்னடபாளையம் அருகே, பாப்பான் கால்வாயில் இருந்து அடையாறு கால்வாயில் தண்ணீர் செல்லும் வகையில், இந்த சாலையோரம் மூடுகால்வாய் அமைக்கும் பணி, கடந்த ஆக., மாதம் துவங்கி, நடந்து வருகிறது.
கட்டுமானம் பணி நடக்கும் இடத்தில், கம்பிகள் அபாயகரமாக நீட்டிக்கொண்டுள்ள நிலையில், இங்கு தடுப்புக்களோ, அறிவிப்பு பலகைகளோ வைக்கவில்லை.
இதனால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. தடுப்புகள், அறிவிப்பு பலகை வைத்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.