ADDED : ஏப் 27, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என, மூன்று பிரிவுகளில், 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் செய்து சிறைக்கு வரும் கைதிகள், சிறைக்குள்ளும் குற்றங்களை செய்வதும், அதை கண்காணித்து தடுப்பதும், சிறைக் காவலர்களுக்கு தலைவலியாக இருந்து வருகிறது.
அந்த வகையில், சிறைக்குள் கஞ்சா, மொபைல் போன் உள்ளிட்டவை தொடர்ந்து கைப்பற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று விசாரணை சிறையில் சிறை காவலர்கள் மோப்ப நாயுடன் ரோந்து பணி சென்ற போது, கேட்பாரற்று கிடந்த பொட்டலம் கிடைத்தது.
அதை பிரித்து பார்த்த போது, 42 கிராம் கஞ்சா இருந்தது. சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்படி, புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறைக்குள் கஞ்சா பொட்டலம் கைப்பற்றப்பட்டது குறித்து விசாரித்து வருகின்றனர்.

