/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இப்போதைக்கு சொல்ல முடியாது!' மாசு கட்டுப்பாட்டு வாரியம் கைவிரிப்பு
/
'இப்போதைக்கு சொல்ல முடியாது!' மாசு கட்டுப்பாட்டு வாரியம் கைவிரிப்பு
'இப்போதைக்கு சொல்ல முடியாது!' மாசு கட்டுப்பாட்டு வாரியம் கைவிரிப்பு
'இப்போதைக்கு சொல்ல முடியாது!' மாசு கட்டுப்பாட்டு வாரியம் கைவிரிப்பு
ADDED : அக் 27, 2024 12:27 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் கிராமத்தெருவில் உள்ள விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம் மதியம், பள்ளி கட்டட பகுதியில், மர்ம வாயு கசிந்தது.
இதனால், பள்ளியின் மூன்றாம் தளத்தில், எட்டு ஒன்பது 10ம் வகுப்புகளில் படிக்கும் மாணவியர், 45 பேருக்கு வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது. ஆசிரியர்கள், மாணவியரை மீட்டு, தனியார் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 45 மாணவியரும் நேற்று மாலை வீடு திரும்பினர்.
இதற்கிடையில், நேற்று காலை, மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரி கேசவமூர்த்தி அறிவுறுத்தல்படி, இரு அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காற்றில் ரசாயன வாயு கலந்துள்ளது குறித்து, அளவீடு கருவிகளை கொண்டு, ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வாயு கசிவு தொடர்பாக இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. தலைமை அலுவலகத்தில் இருந்து, செய்தி குறிப்பு வெளியாகும்' என்றனர்.
தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், நேற்று மதியம் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைகளின் அளவுகள், வேதியியல் ஆய்வகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
பின் முருகன் கூறுகையில், ''பள்ளியில் ஆய்வு செய்துள்ளோம். ஆய்வு முழுமை பெறவில்லை. தற்போதைய சூழலில், பாதிப்பு ஏற்பட்ட பிளாக்கில், வகுப்புகளில் துவங்க சாத்தியமில்லை,'' என்றார்.