ADDED : ஆக 06, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே நின்றிருந்த வேன் பின்னால் மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது.
பூந்தமல்லியில் இருந்து போரூர் நோக்கி 'ரெனால்டு நிசான்' கார் நேற்று சென்றது. பூந்தமல்லி அருகே குமணன்சாவடி பகுதியை கடந்து சென்றபோது, சிக்னல் பகுதியில் முன்னால் நின்றிருந்த வேனின் பின்னால் மோதியது.
இதில், காரின் முன் பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. இந்த, விபத்தில் காரின் முன்பகுதியில் புகை வெளியேறி லேசாக தீ பிடித்து எரிந்தது.
அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றியும், தீயணைப்பான் கருவியை பயன்படுத்தியும், உடனடியாக தீயை அணைத்தனர். இதனால், கார் லேசான சேதத்துடன் தப்பியது. விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.