/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் திருட்டு அண்ணாநகரில் துணிகரம்
/
கார் திருட்டு அண்ணாநகரில் துணிகரம்
ADDED : ஜூன் 13, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், அண்ணா நகர் மேற்கு, கதிரவன் காலனி 16வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் எத்திராஜ் ரத்தினம், 55. இவர் பிரபல நாளிதழில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது டொயோட்டா பார்ச்சூனர் கார், நேற்று காலை திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரையடுத்து, திருமங்கலம் போலீசார் விசாரித்தனர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் காரின் பதிவு எண் பலகையை மாற்றி, காரை திருடி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.