/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மரம் விழுந்து சரக்கு வாகனம் ஆட்டோ சேதம்
/
மரம் விழுந்து சரக்கு வாகனம் ஆட்டோ சேதம்
ADDED : நவ 30, 2024 12:36 AM
சென்னை, ன்னையில் இரு தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதனால், ஆங்காங்கே நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மரங்கள் வேறுடன் சாலையில் சாய்ந்து வருகின்றன. அவற்றை மாநகராட்சி மற்றும் தீயணைப்பு படையினர் அகற்றி வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள, 113 வது வார்டு கவுன்சிலர் அலுவலகம் அருகே, நடைபாதையில் இருந்த மரம், நேற்று மதியம், 12:15 மணியளவில் சாலையில் சாய்ந்தது. இதில், சரக்கு வாகனம், ஆட்டோ சேதமடைந்தது.
சம்பவம் அறிந்துவந்த மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
இதனால் வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.