/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'காசாகிராண்ட் ஹைகிளேர்' குன்றத்துாரில் புதிய திட்டம்
/
'காசாகிராண்ட் ஹைகிளேர்' குன்றத்துாரில் புதிய திட்டம்
'காசாகிராண்ட் ஹைகிளேர்' குன்றத்துாரில் புதிய திட்டம்
'காசாகிராண்ட் ஹைகிளேர்' குன்றத்துாரில் புதிய திட்டம்
ADDED : மே 23, 2025 12:29 AM
சென்னை, சென்னை குன்றத்துாரில், 85க்கும் மேற்பட்ட சிறப்பு வசதிகளுடன், 'காசா கிராண்ட் ஹைகிளேர்' என்ற பெயரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, காசா கிராண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, காசா கிராண்ட் நிறுவன அறிக்கை:
சென்னையை அடித்தளமாக கொண்டு, 2003ல் துவங்கப்பட்ட காசா கிராண்ட் நிறுவனம் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோருக்கு வீடு வழங்கி உள்ளது.
இந்த வரிசையில், சென்னை மேற்கில், போரூரில் இருந்து, 10 நிமிட பயண தொலைவில், குன்றத்துார் 100 அடி சாலையில், புதிய திட்டத்தை துவங்கி உள்ளோம். இங்கு, 3.03 ஏக்கர் நிலத்தில், 330 பிரீமியம் தரத்திலான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில், 2, 3 படுக்கை அறைகள் கொண்டதாக வீடுகள் கட்டப்படுகின்றன. இங்கு, 2.17 ஏக்கர் நிலம் திறந்தவெளி பரப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்ணறிவு மிக்க வடிவமைப்பு வாயிலாக, ஆடம்பர சொகுசு வசதிகளுடன் அமைகிறது.
இங்கு, 8,500 சதுர அடியில் கிளப் ஹவுஸ், 1,000 சதுர அடியில் நீச்சல்குளம் மற்றும் பல்வேறு விளையாட்டு வசதிகள் உட்பட, உலகத்தரம் வாய்ந்த, 85 சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய பதிவுடன் செயல்படுத்தப்படும் காசா கிராண்ட் ஹைகிளேர் திட்டம் குறித்த கூடுதல் விபரங்கள் பெற, www.casagrand.co.in என்ற இணையதளம் அல்லது, 98844 60877 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***