/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் ஸ்கேன் மையம் துவங்கிய 'காசாகிராண்ட்'
/
ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் ஸ்கேன் மையம் துவங்கிய 'காசாகிராண்ட்'
ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் ஸ்கேன் மையம் துவங்கிய 'காசாகிராண்ட்'
ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் ஸ்கேன் மையம் துவங்கிய 'காசாகிராண்ட்'
ADDED : பிப் 14, 2026 05:37 AM

சென்னை: சென்னை, பெசன்ட் நகரில் குறைந்த கட்டணத்தில் உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில், ஸ்கேன் மையத்தை 'காசாகிராண்ட்' பவுண்டேஷன் துவக்கியுள்ளது.
இது தொடர்பாக காசாகிராண்ட் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கை:
தரமான மருத்துவ சேவைகள் அனைவருக்கும் மலிவான கட்டணத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான 'காசாகிராண்ட்' இப்பணியில் இறங்கியுள்ளது.
இதற்காக, சென்னை பெசன்ட் நகரில் 'காசாகிராண்ட் பவுண்டேஷன் டயாக்னஸ்டிக் சென்டர்' துவக்கி உள்ளது.
காசாகிராண்ட் நிறுவனத்தின் முதல் சி.எஸ்.ஆர்., முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. லாப நோக்கமற்ற முயற்சியாக இந்த நவீன மருத்துவ பரிசோதனை மையம் துவங்கப்பட்டுள்ளது.
இங்கு, 50 ரூபாய் முதல் துவங்கும் கட்டணத்தில், 100க்கும் மேற்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். வழக்கமான கட்டணத்தின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே வசூலிக்கப்படும்.
இந்த மையத்தில், டிஜிட்டல் எக்ஸ்ரே, இ.சி.ஜி., சிடி ஸ்கேன், தைராய்டு, நீரிழிவு, ட்ரோபோனின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இத்துடன், முழு உடல் பரிசோதனைகளும் இங்கு மேற்கொள்ளப்படும்.
காசாகிராண்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் கூறுகையில், ''நோயறிதலுக்காக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது, அறிக்கை அளிப்பது அதிக செலவாக மாறிவரும் நிலையில், குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகள் செய்ய இந்த மையத்தை துவக்கி இருக்கிறோம்,'' என்றார்.
இந்த மையத்தில், குளுக்கோஸ் எப் அண்டு பிபி, சிறுநீர் முழுமையான பரிசோதனைகள் தலா, 50 ரூபாய்; இ.சி.ஜி., 100 ரூபாய்; மார்பு எக்ஸ்ரே, 150; முழங்கால், கணுக்கால், பாதம் எக்ஸ்ரே, 250 ரூபாய்; முழு வயிற்றுப்பகுதி அல்ட்ரா சவுண்டு பரிசோதனை, 700 ரூபாய்; மூளை நரம்பியல் சிடி ஸ்கேன், 900 ரூபாய் என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த மையம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை, காலை 7 முதல், பகல் 1:30 மணி வரையும் செயல்படும்.
முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள, 97905 66566 என்ற மெபைல் போன் எண்ணில் அணுகலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனை மைய முகவரி: காசாகிராண்ட் பவுண் டேஷன் டயக்னாஸ்டிக் சென்டர், 1வது அவென்யூ, எல்லையம்மன் கோவில் எதிரில், சாஸ்திரி நகர், சென்னை -- 600 090.

