/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2 கோடி நிலமோசடி ஆவடி தம்பதி கைது
/
ரூ.2 கோடி நிலமோசடி ஆவடி தம்பதி கைது
ADDED : பிப் 14, 2026 05:37 AM

ஆவடி: போலி ஆவணங்கள் தயாரித்து, 2 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
வில்லிவாக்கம், ராஜமங்கலத்தைச் சேர்ந்தவர் வில்லியம், 67. ஆவடி அடுத்த மிட்னமல்லி கிராமத்தில், அவரது தாய் ஏகவள்ளியம்மாள் பெயரில் 1.28 ஏக்கர் நிலம் இருந்தது. கடந்த 2008ல் ஏகவள்ளியம்மாள் இறந்து விட்டார்.
அந்த நிலத்தை, ஏகவள்ளியம்மாள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்தது தெரிய வந்தது. நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய்.
இது குறித்து வில்லியம், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த மாணிக்கராஜா தலைமையிலான போலீசார், நில மோசடியில் ஈடுபட்ட ஆவடி கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன், 42, அவரது மனைவி வரலக்ஷ்மி, 42, ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

