/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் பயணியர் காத்திருக்க 'ஏசி' அறையை திறந்தது ரயில்வே
/
தாம்பரத்தில் பயணியர் காத்திருக்க 'ஏசி' அறையை திறந்தது ரயில்வே
தாம்பரத்தில் பயணியர் காத்திருக்க 'ஏசி' அறையை திறந்தது ரயில்வே
தாம்பரத்தில் பயணியர் காத்திருக்க 'ஏசி' அறையை திறந்தது ரயில்வே
ADDED : பிப் 14, 2026 05:36 AM

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில், 'ஏசி' வசதியுடன் கூடிய பயணியர் காத்திருப்பு அறை நேற்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், 100 ரயில் நிலையங்களில் இந்த வசதியை கொண்டு வர, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தாம்பரம் மூன்றாவது ரயில் முனையமாக மாறியபின், பயணியரின் தினசரி வருகை, 2.30 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால், காத்திருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என பயணியர் கூறினர்.
இந்நிலையில், 'ஏசி' வசதியுடன் கூடிய பயணியர் காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலைய மேலாளர் முகமது அப்துல் ரஹ்மான், பயணியர் காத்திருப்பு அறையை, நேற்று திறந்து வைத்தார்.
சொகுசு இருக்கைகள், பாலுாட்டும் அறை, இலவச வைபை வசதி, கழிப்பறை வசதி உட்பட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அறை 24 மணி நேரமும் இயங்கும். ஒரு மணி நேரத்துக்கு, 35 ரூபாய் கட்டணம்.
இதற்கான, ஐந்து ஆண்டுகள் கால உரிமம், 'சன் மோட்டார் பார்ட்ஸ்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தாம்பரத்தில் பயணியர் காத்திருப்பு அறை திறக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று, தமிழகத்தில், பயணியர் வருகை அதிகமுள்ள 100க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில், இந்தாண்டு இறுதிக்குள், பயணியர் காத்திருப்பு அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

