/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரந்துாாில் நிலம் அளவீடு தடுத்த 9 பேர் மீது வழக்கு
/
பரந்துாாில் நிலம் அளவீடு தடுத்த 9 பேர் மீது வழக்கு
பரந்துாாில் நிலம் அளவீடு தடுத்த 9 பேர் மீது வழக்கு
பரந்துாாில் நிலம் அளவீடு தடுத்த 9 பேர் மீது வழக்கு
ADDED : நவ 07, 2024 12:31 AM
காஞ்சிபுரம்,
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு, பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 5,400 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில், தனியார் வசமிருக்கும், 3,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. எஞ்சியவை அரசு நிலங்கள்.
தனியாரிடம் உள்ள நிலம் எடுக்கும் பணிக்கு, அரசு ஒவ்வொரு கிராமமாக அறிவிப்பை வெளியிட்டு, நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், தண்டலம் ஊராட்சியைச் சேர்ந்த நெல்வாய் துணை கிராமத்தில், வருவாய் துறையினர் நிலம் அளக்க சென்றனர். அவர்களை முற்றுகையிட்டு, கிராமத்தினர் வாக்குவாதம் செய்தனர்.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் சமரசத்திற்கு பின், நெல்வாய் கிராமத்தினர் புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று வழக்குகளின்கீழ், நெல்வாயைச் சேர்ந்த ஒன்பது பேர் மீது நேற்று, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.