/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் நடத்தை விதிமீறிய 'மாஜி' அமைச்சர் மீது வழக்கு
/
தேர்தல் நடத்தை விதிமீறிய 'மாஜி' அமைச்சர் மீது வழக்கு
தேர்தல் நடத்தை விதிமீறிய 'மாஜி' அமைச்சர் மீது வழக்கு
தேர்தல் நடத்தை விதிமீறிய 'மாஜி' அமைச்சர் மீது வழக்கு
ADDED : மார் 20, 2024 12:12 AM
கோயம்பேடு,
மதுரவாயல் தொகுதி தி.மு.க., முன்னாள் வட்டச்செயலர் கமலக்கண்ணன், சமீபத்தில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
இதையடுத்து, நெற்குன்றம் மீனாட்சி அம்மன் நகரில், கமலக்கண்ணன் வீட்டின் அருகே வைத்திருந்த தி.மு.க., கொடி கம்பத்திற்கு, அ.தி.மு.க., கொடி நிறம் பூசப்பட்டது.
தொடர்ந்து, 17ம் தேதி மதியம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், விருகம்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ., ரவி ஆகியார் முன்னிலையில், அ.தி.மு.க., கொடியேற்றப்பட்டு, தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
அன்றைய தினம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தேர்தல் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறாமல் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
இது குறித்து, நெற்குன்றம் வி.ஏ.ஓ., குமார், கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

