/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஷோரூமில் பழைய பைக் ஏமாற்றி விற்றதால் வழக்கு
/
ஷோரூமில் பழைய பைக் ஏமாற்றி விற்றதால் வழக்கு
ADDED : ஜன 05, 2025 12:20 AM
பம்மல்சென்னை, ராயபுரத்தை சேர்ந்தவர் யாதேஷ்,24. இவர், பல்லாவரம் அருகே, பம்மல் பிரதான சாலையில் உள்ள ஷோரூமில், டிச.,6ல் 'அப்பாச்சி' பைக்கை வாங்கியுள்ளார்.
பைக்கை வாங்கிச் சென்றது முதல் தொடர்ந்து அதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. சந்தேகம் அடைந்த யாதேஷ், வண்டியை முழுதுமாக சோதனை செய்த போது, அது ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட பழைய வண்டி என்பது தெரியவந்தது.
இதையடுத்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் யாதேஷ் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், பழைய வண்டியை விற்றது உறுதியானது. இதையடுத்து, ஷோரூமின் உரிமையாளர் விவேக், மேலாளர் செல்வகுமார், இன்சார்ஜ் தேவா, விற்பனையாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

