/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கி பைனலில் சி.பி.சி.எல்., அணி வெற்றி
/
ஹாக்கி பைனலில் சி.பி.சி.எல்., அணி வெற்றி
ADDED : பிப் 14, 2025 12:18 AM
மணலி, பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான, ஹாக்கி இறுதி போட்டியில், சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி அணி வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது.
சென்னை மண்டல அளவில், பாலிடெக்னிக் கல்லுாரிகள் இடையேயான விளையாட்டு போட்டிகளை, சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி நடத்தி வருகிறது.
அதன்படி, ஹாக்கி இறுதி போட்டி நேற்று, மணலி, அம்பேத்கர் விளையாட்டு திடலில் நடந்தது. இதில், ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லுாரியுடன் - சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி மோதியது.
இதில், 2 - 0 என்ற புள்ளிக் கணக்கில், சி.பி.சி.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிக்கு, கல்லுாரி முதல்வர் லட்சுமி நாராயணன், மணலி - சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உஷா, ஹாக்கி பயிற்றுநர் லுாயிஸ் ஆகியோர், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
வெற்றி பெற்ற அணி, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

