/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் சதுக்க 27 மாடி பணிகள் பணி ஆணை வழங்கியதால் வேகம்
/
சென்ட்ரல் சதுக்க 27 மாடி பணிகள் பணி ஆணை வழங்கியதால் வேகம்
சென்ட்ரல் சதுக்க 27 மாடி பணிகள் பணி ஆணை வழங்கியதால் வேகம்
சென்ட்ரல் சதுக்க 27 மாடி பணிகள் பணி ஆணை வழங்கியதால் வேகம்
ADDED : ஜன 26, 2025 03:03 AM

சென்னை:சென்ட்ரல் சதுக்கத்தில் அமைய உள்ள பிரமாண்ட, 27 மாடிக்கான பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளதால், கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதில் ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், தனியார் அலுவலகங்கள் அமைய உள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் நிலையம், பேருந்து நிலையம் என, முக்கிய மையமாக இருந்து வருகிறது.
இங்கு தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்ட்ரல் சதுக்கம் வடிவமைக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு மார்ச்சில் பூங்கா திறக்கப்பட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிர் பகுதியில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலை வளாகத்தில் 27 மாடி கொண்ட பிரமாண்ட கட்டடம் கட்டப்பட உள்ளது.
இதற்கான அடிதள பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள கோபுர பணிகளை மேற்கொள்ள, 350 கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அடுத்த கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்ட்ரல் சதுக்கம் 550 கோடி ரூபாயில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்ட்ரல் சதுக்கத்தில் ஒரு பகுதியாக, 27 மாடி கொண்ட கட்டடம் கட்ட முடிவு செய்து, தற்போது அடித்தள கட்டமைப்பு பணிகள், 180 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்டமாக, கோபுர கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக, பணி ஆணைகள் வழங்கப்பட உள்ளன.  இதில் 4 தரை கீழ்தளங்களில், 24,154 சதுர மீட்டரில் பிரமாண்ட வாகன நிறுத்தம் வருகிறது. இதில், 2,000 வாகனங்கள் வரை நிறுத்த முடியும்.
இதையடுத்து, தரைத் தளத்தில் இருந்து 4வது தளம் வரை சில்லரை வணிக பயன்பாட்டிற்கு 15,510 சதுர மீட்டரும், 5வது முதல் 10வது தளம் வரை, 18,616 சதுர மீட்டர் அலுவலக பயன்பாட்டிற்கும், 11 முதல் 24வது தளம் வரை 43,428 சதுர மீட்டர் 'ஏ' கிரேடு அலுவலக பயன்பாட்டிற்கு 'லீஸ்'க்கு வழங்கப்பட உள்ளது.
25வது தளத்தில் 3,102 சதுர மீட்டரில் சர்வீஸ் தளமாகவும், 26, 27வது தளங்களில் 5,823 சதுர மீட்டரில் ஹோட்டல்கள் அமைய உள்ளன.
இதற்கான, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதால், அடுத்த சில மாதங்களில் பணிகள் துவங்கும். கட்டுமான பணிகள் துவங்கி, அடுத்த மூன்று ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

