ADDED : மார் 19, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முகப்பேர், முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 23; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று வீட்டின் வாசலில் நின்றபடி, அவரது நண்பர்களிடம் மொபைல் போனில் பேசி கொண்டிருந்தார்.
இந்நிலையில், அங்கு பைக்கில் வந்த ஒருவர் பிரகாஷிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்து, திடீரென பிரகாஷின் ஒரு சவரன் செயினை பறிக்க முயன்றார்.
பிரகாஷ் சுதாரித்து செயினை பிடித்துள்ளார். இதனால் செயின் அறுந்துள்ளது. பாதி செயினுடன் மர்ம நபர் தப்பினார். இது குறித்து ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.