/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகால்வாய் பணி போக்குவரத்தில் மாற்றம்
/
மழைநீர் வடிகால்வாய் பணி போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஏப் 08, 2025 01:29 AM
சென்னை, புளியந்தோப்பு போக்குவரத்துக்கு உட்பட்ட டிமலஸ் சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, இன்று முதல் துவங்க உள்ளதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து, புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக சென்ட்ரல், பாரிமுனை செல்ல வாகனங்களுக்கு அனுமதில்லை. மாறாக, டிமலஸ் சாலை வழியாக ஒரு வழிப்பாதையாக திருப்பிவிடப்படுகிறது
* சென்ட்ரல், பாரிமுனை, சூளை ரவுண்டானா, யானைக்கவுனி சாலை வழியாக பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு செல்லும் அனைத்து வாகனங்களும், டிமலஸ் சாலை வழியாக அனுமதில்லை. மாறாக புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக, ஒரு வழிப்பாதையாக திருப்பிவிடப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு, காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
***

